Seeraga Samba Rice Benefits : சீராக சம்பா அரிசியின் நன்மைகள்

Seeraga Samba Rice Benefits : நம் தமிழகத்தைப் பொறுத்த வரையில், சீரகச் சம்பா அரிசி மிகவும் பிரபலமானது. இந்த சீரக சம்பா அரிசியை பலரும் சமைத்து சாப்பிடுவார்கள். இந்த அரிசி ரகம் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட பழங்கால அரிசி வகையாகும். குறிப்பாக இந்த சீரக சம்பா அரிசி, புலாவ், பிரியாணி போன்ற விருந்துகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது கொஞ்சம் விலை உயர்ந்த சாதம் ஆனால் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இது சீரக விதைபோல் போல சிறியதாக இருப்பதால், சீரக சம்பா என்று அழைக்கப்படுகிறது. இது பாஸ்மதி அரிசி போன்று உணவுகளுக்கு வலுவான சுவையை அளிக்கக்கூடியது. தற்போது இந்த சீரக சம்பா அரிசியின் நன்மைகள் (Seeraga Samba Rice Benefits) பற்றி தெரிந்து கொள்வோம்.

சீராக சம்பா அரிசியின் ஊட்டச்சத்து

100 கிராம் அரிசியில் உள்ள ஊட்டச்சத்து,

* ஆற்றல் – 170 கிராம்

* புரோட்டீன் – 3 கிராம்

* நார்ச்சத்துக்கள் – 2.3 கிராம்

* கார்போஹைட்ரேட் – 38 கிராம்

* கொழுப்பு – 0

சீரக சம்பா அரிசியில் கொழுப்பு இல்லை. அதனால் உடல் பருமன் ஏற்படாது. உடல் பருமன் உள்ளவர்களும் இந்த அரிசியை எடுத்துக் கொள்ளலாம். இதில் நிறைய நார்ச்சத்துக்கள் மற்றும் புரதங்கள் உள்ளன.

Seeraga Samba Rice Benefits - செலினியம் சத்து

Seeraga Samba Rice Benefits : சீரக சம்பா அரிசியில் செலினியம் அதிகம் உள்ளது. செலினியம் ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் உங்கள் செல்கள் அழிக்கப்படாமல் பாதுகாக்கிறது. இது சிறுங்குடல், பெருங்குடல் மற்றும் மார்பக புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. இதயம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மை காக்கிறது. மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் ஹார்மோன் சமநிலையின்மையை தடுக்க உதவுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது ஆஸ்துமா அறிகுறிகளிலிருந்து நம்மைத் தடுக்க உதவுகிறது. இந்த அரிசியில் உள்ள செலினியம் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. ஆராய்ச்சியின் படி, 200 மைக்ரோகிராம் செலினியத்தில் 65-80% செலினோமெதியோனைன் காணப்படுகிறது. இது புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. குறிப்பாக நுரையீரல், குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயால் இறப்பதில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

Seeraga Samba Rice Benefits - சீராக சம்பா அரிசியின் மருத்துவ குணங்கள்

உடல் எடை குறைக்கு :

  • சீரக சம்பா அரிசி உடலுக்கு அதிக சக்தியை அளிக்கும் தானியமாகும். 100 கிராம் அரிசியில் 170 கிலோ கலோரி உள்ளது. அதே நேரத்தில் இது கொழுப்பு இல்லாத உணவாகும். எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த உணவாகும். கொலஸ்ட்ரால் இல்லாத உணவைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு ஏற்றது.
  • இதில் கலோரிகள் இருந்தாலும், கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புகள் இதில் இல்லை. இது கார்டியோ தொடர்பான உடல்நலப் பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. இதில் கொழுப்பு, சோடியம் மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாக இருப்பதால் பருமனானவர்கள் இந்த அரிசியை சாப்பிடலாம்.

இரத்த அழுத்தத்தை பராமரிக்க :

  • நமது இரத்த அழுத்தத்தை பராமரிப்பதில் சோடியம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
  • இது பக்கவாதம், மூளை பாதிப்பு, இதய நோய்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சீரக சம்பா நல்லது. ஏனெனில் இதில் சோடியம் குறைவாக உள்ளது. இது உங்கள் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.

மலச்சிக்கலை தடுக்க :

  • சீரகம் சம்சா அரிசி ஒரு மலமிளக்கியாக செயல்படக் கூடியது. அதனால் மலச்சிக்கலை தடுக்கிறது. மலச்சிக்கலுக்கு பல காரணங்கள் இருக்கலாம், முக்கிய காரணம் நார்ச்சத்து குறைந்த உணவை உண்பதுதான். எனவே, பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் மலச்சிக்கலைப் போக்க நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

குறைந்த கிளைசெமிக் குறியீடு :

  • சீரக சம்பா அரிசியில் குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது. உணவு பசியை அடக்க உதவுகிறது. இது நீண்ட நேரம் முழுமை உணர்வைத் தருகிறது. இந்த அரிசி உணவு சீராக இருக்கும்போது இரத்தத்தில் சர்க்கரையின் வெளியீடு குறைகிறது. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.

ஆண்மை குறைபாடு நீங்க :

  • சமீப காலமாக, முறையற்ற உணவு முறையால் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு பிரச்சனை அதிகரித்து வருகிறது. அன்றாட உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாறுவதற்கு இவை முக்கியக் காரணங்கள். நோய்களுக்கு மட்டுமல்ல ஆண்மைக்குறைவுக்கும் உணவே மருந்து. இந்த சீராக சம்பா அரிசியில் ஆண்மையை அதிகரித்து உடலை வலுப்படுத்தும் சத்துக்கள் உள்ளன.
  • ஆண்மைக்குறைவு உள்ள ஆண்கள் சீராக சம்பா அரிசியில் சமைத்த உணவை தினமும் சாப்பிட்டு வந்தால் வலிமை பெறும். ஒரு மாதத்தில் அதற்கான பலனும் தெரிந்துவிடும்.

ஆற்றல் அதிகரிக்க :

  • இந்த அரிசியை நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் தொற்றுநோய்களுக்கு ஆளாகிறார்கள். இதை நம் உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல்நலக் கோளாறுகள் தடுக்கப்படுகிறது. எப்போதும் உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது. இது சோர்வைப் போக்கி சுறுசுறுப்பை தருவதோடு நரம்புகளுக்கு வலு கொடுக்கிறது.
  • அதுமட்டுமின்றி உடலில் உள்ள கொழுப்பையும் கரைக்கும். இது இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. இதய கோளாறுகள் தடுக்கப்படும். அதிகப்படியான நார்ச்சத்து புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகிறது.

Latest Slideshows

Leave a Reply